புதர் மண்டிய ஓடையை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் புதர் மண்டியுள்ள ஓடையை தூர்வாரி சுத்தப்படுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூரை அடுத்த அருணாச்சலபுரத்தில் பழமையான ஓடை உள்ளது. பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை ஓடையில் கொட்டுவதாலும் முறையாக தூர்வாரப்படாததாலும் ஓடையில் கழிவு நீர் தேங்க துவங்கியுள்ளது. முள்மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் ஓடையை உடனே தூர்வாரித் சரி செய்து தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version