மதுரை மேலூரில் வாகன தணிக்கையின் போது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
மக்களவை தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டதையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில், உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால், பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேனுர் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி அஜய் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுத்து செல்வது தெரிய வந்தது. இந்தப் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.