போராட்டத்தின் போது, அழுத குழந்தையை சமாதானப்படுத்திய பொதுமக்கள்

லெபனான் நாட்டில், அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களின் சத்தத்தில் விழித்தெழுந்த குழந்தையை, அங்கிருந்தவர்கள் பாடல் பாடி, நடனமாடி மகிழ்வித்தனர்.

லெபனான் அரசு பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் Furn el Chebbak என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில், பெண் ஒருவர் தனது குழந்தையுடன் பங்கேற்றார். இரவு அசந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, போராட்டக்காரர்களின் கோஷத்தில் திடீரென விழித்தது. இதை பார்த்த அப்பெண், அங்கிருந்தவர்களை அமைதியாக இருக்க சைகை காட்டவே, நிலைமையை புரிந்து கொண்ட போராட்டக்காரர்கள், குழந்தையை சுற்றி நின்று பாடல் பாடி, நடனமாடி மகிழ்வித்தனர்.

Exit mobile version