திருவள்ளூர் அருகே மர்ம பொருள் வெடித்து சாமியார் துடிதுடித்துப் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் இறையாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். சாமியாரான இவர் சித்த வைத்தியம், ஜோதிடம் பார்த்தல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில், சிஷ்யையாக லாவண்யா என்ற பெண் அவர் வீட்டிற்கு வந்தார். இருவரும் பூஜை செய்து கொண்டிருந்த போது சாமியார் கோவிந்தராஜ் மீது மர்ம பொருள் விழுந்து வெடித்து தீப்பற்றியது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். லாவண்யா எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த நிலையில், சாமியார் உயிரிழக்க காரணமான மர்ம பொருள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.