திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்லடத்தில், ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகிறார்கள் என்பதை அறிய ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பல்லடம் நான்கு முனை சந்திப்பு, எம்.ஜி.ஆர் சாலை, காய்கறி மார்க்கெட், காரணம்பேட்டை, மங்களம், அவிநாசி பாளையம் ஆகிய முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.