2018 – 2019 வேளாண் பருவத்தில் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி 0.6 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த இந்த ஆண்டிற்கான வேளாண் பருவத்தில் 31. 39 கோடி டன் அளவிற்கு காய்கறிகளும், பூக்களும் உற்பத்தி ஆகி உள்ளதாக தெரிகிறது. ஆனால் இவற்றின் உற்பத்தி 31.47 கோடி டன்னாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்திருந்தது.
வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின் படி கடந்த 2017 – 2018ம் ஆண்டின் பருவத்தில் காற்கறி மற்றும் பழங்களின் உற்பத்தி 31.17 கோடி டன்னாக இருந்துள்ளது. அதே உற்பத்தி 2018 – 2019ம் ஆண்டில் 31.39 கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. எனினும் உற்பத்தி வளர்ச்சி 0.6 சதவிகிதம் என்ற அளவில் மிக குறைவாகவே உள்ளது.