கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 526 அடியாகக் குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துவிட்டது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 526 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 117 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88 புள்ளி 93 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.