உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அக்டோபர் மாதத்தில் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் தற்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது.
மேலும் தலைகுந்தா, HPF மற்றும் காந்தல் பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்டது. மேலும் வாகனங்களின் மேல் பனி பொழிந்துள்ளதால் அவை ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளன. இந்த உறைபனி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப் பொழிவு காலை 11 மணி வரை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.