வறட்சி காரணமாக காடு வளர்ப்பு திட்டம் பாதிப்பு

பருவமழை பொய்த்து வனப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் காடு வளர்ப்பு திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போதிய மழை இல்லாததால், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் காடுகளில் உள்ள இயற்கையான நீராதாரங்கள் பெரும்பாலும் வற்றி விட்டதோடு செடி கொடிகளும் காய்ந்து கருகி வருகின்றன. இதனால், வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட காடு வளர்ப்பு திட்டம் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மரக்கன்றுகளை வறட்சியின் பிடியில் இருந்து காக்க வனத்துறை முயற்சி எடுத்து வருகிறது. மலை முகட்டில் ஓடும் பவானியாற்று நீரை மோட்டார்களின் உதவியுடன் நீண்ட குழாய்கள் மூலம் கொண்டு வந்து மரக்கன்றுகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

Exit mobile version