காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயிலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்தனர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அதிமுகவினர் அபிஷேகம் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயிலில், அதிமுகவினர் வெள்ளித் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முன்னாள்அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சோமசுந்தரம் தலைமையில் வெள்ளித் தேர் இழுத்துச் செல்லப்பட்டது.