உதகையில் கடுங் குளிரால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவு

உதகையில், காற்றுடன் கூடிய மழை பெய்தால் கடுங்குளிர் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்துள்ளது..

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவுவதால் உதகையில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன்ற. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், உதகைக்கு வருபவர்கள் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். கடுங் குளிர் காரணமாக உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version