வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடும் சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாக உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சில மீனவர்கள் தங்களது வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகுகள் கரையில் நிற்க வைக்கப்பட்டதால் கடற்கரைப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.