கனமழை காரணமாக புல்லூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டவுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கேரள காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரினை ஆதாரமாக கொண்டுள்ளது. 100 அடி கொள்ளவு கொண்ட அணையில், கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர் மட்டம் 80 அடிக்கும் கீழ் சென்றது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்தது. திடீரென பத்தாயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Exit mobile version