நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழையால் 13 நாட்களுக்கு முன்பு அடித்து செல்லப்பட்ட இளைஞர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. வெள்ளத்தில் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது கூடலூரில் இருந்து எல்லை மலை செல்லும் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு பணியில் ஈடுபட்ட சைவத்தீன் என்பவர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரின் உடலை தேடி வந்தநிலையில், ஆற்றங்கரையோரம் அவரது உடல் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சைவத்தீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.