திருப்பூர் திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் கனமழை காரணமாக குளிக்க தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் கனமழை பெய்து வருவதால் இரண்டாவது நாளாக பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. சுற்றுலாத் தலமான இதற்கு, தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு நாட்களாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் வறண்டு கிடந்த திருமூர்த்தி அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததோடு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Exit mobile version