நீலகிரில் கனமழையால் 5 பேர் உயிரிழப்பு

கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதே போன்று, நடுவட்டம் பகுதியில் அமுதா என்பவரும் காவியா என்றவரும், வீடு இடிந்து விழுந்து பலியாகினர . காட்டுக்குப்பை பகுதியில் 3 பேர் உயிரிழந்தனர். அதே போன்று, குருத்துக்குளி கிராமத்தில் இரண்டு பெண்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version