டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசித்துவரும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி போல காணப்படும் காற்று, தரக்குறியீட்டில் 407 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது, மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹாப்புயல் காரணமாக டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாநிலங்களில் பரவலாக மழைபெய்ய கூடும் என்பதாலும், காற்றுமாசுபாடு குறைய வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.