குடும்ப சூழ்நிலை காரணமாக கிணற்றில் குதித்த தந்தை

சேலம் அருகே 100 அடி கிணற்றில் குதித்த நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் வெள்ளரி வெள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் பிரபு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற முடியாது எனக் கருதி அதே பகுதியில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து உள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பிரபுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Exit mobile version