கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் கிணற்றில் விழுந்து தற்கொலை

கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் தம்பதியினர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருகூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் – சரதா தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரதா வீட்டின் அருகே உள்ள கிணறு ஒன்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சரதா தற்கொலை செய்து சடலமாக மிதப்பதாக கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற கிருஷ்ணனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version