மாட்டுப் பொங்கலையொட்டி சேலம் ஆத்தூரில் பல வண்ணங்களில் கயிறுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் தோழனாக விளங்கும் மாடுகளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மாடுகளை குளிப்பாட்டி வண்ணப் பொடிகளை தூவி, பல வண்ணங்களில் மூக்கணாங்கயிறு, கொம்புக்கயிறு, கழுத்துக்கயிறு ஆகியவை கட்டப்படுகின்றன.பொங்கல் பண்டிகை என்றாலே களைகட்டும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அலங்காரம் செய்ய பலவண்ணங்களில் கயிறுகள் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.மாடுகளுக்கான நெத்தி சலங்கை, கால் சலங்கை ஆகியவையும் அதிகளவில் விற்கப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அதிகளவில் தங்களுடைய மாடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.