வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு !

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பின்னர் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்பதால், முற்பகல் 11 மணி முதல், மதியம் 4 மணிவரை, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, லட்சத்தீவு, மாலத்தீவு, மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version