தொடர் கனமழை தனித்தீவானது கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கனமழையால் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரியில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. இதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டும், ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி ஊருக்குள் புகுந்ததால் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை முழுவதுமாக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கவும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவும், பல்வேறு முகாம்களில் தங்கி இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் விடியல் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு தற்போது மழை பாதிப்பில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களை நிற்கதியாக விட்டு விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version