அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ரயில்வே காவல்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னை மண்டலத்தில் 750 ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி மண்டலத்தில் 850 ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version