மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தரும் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை விவாதத்தின் போது, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்த போது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை ஏன் பெற்றுத் தரவில்லை என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், மத்தியில் அளிக்கப்பட்ட சலுகை தவிர, எந்த ஒரு சலுகையையும் இலங்கை தமிழர்களுக்கு திமுக பெற்றுத் தரவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆனால் அதிமுக ஆட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு உட்பட இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற கொள்கையிலிருந்து அதிமுக அரசு பின் வாங்காது என்றும் உறுதியளித்தார்.
அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் மற்றும் தானிய வகைகளை கண்டுபிடிக்க கோவை வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று, எந்த உள்நோக்கமும் தமிழக அரசுக்கு இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் பேசியதை யாராலும் ஏற்க முடியாது எனவும் கூறினார்.