டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்தவர் விஷ்ணுபிரியா.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுப்பிரியா, உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாக கடந்த 2015ம் ஆண்டு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணை கோரி அவரது தந்தை ரவி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
சிபிசிஐடி விசாரணை முறையாக நடப்பதால் தாங்கள் விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று சிபிஐ பதிலளித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகராஜ், வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Discussion about this post