தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்…

தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக வெப்பம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version