தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் – சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் ஊட்டியில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் உறை பனி நிலவும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு உறைபனி நிலவும் என்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக பனி பொழிவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசும், வால்பாறை  பகுதியில் 3 டிகிரி செல்சியசும், குன்னூர், கொடைக்கானல் பகுதியில் 8 டிகிரி செல்சியசும் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வழக்கத்தை விட சற்று அதிகமான பனிப்பொழிவு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version