குடிபோதையில் கார் ஓட்டி விபத்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டை, குலசேகர ஆழ்வார் தெருவில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் மீது வேகமாக சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் தவமணி என்ற பெண் படுகாயமடைந்தார்.

அவரது காலில் 16 தையல்கள் போடப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கமலக்கண்ணன், சுதர்சன் ஆகியோர் மீது அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version