சென்னையில் போக்குவரத்து தலைமைக்காவலர் ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்தும் ஆபாசமாக பேசியும் அட்டாகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் குளிக்க செல்வதைப் போல அரை டவுடருடன் நின்று அட்டகாசம் செய்யும் இந்த குட்டி யானையின் பெயர் கிருஷ்ணகுமார். சென்னை கோயப்பேடு போக்குவரத்து தலைமை காவலர். காக்கிசட்டை போடும் கர்வத்தில் அண்டை வீட்டு வாசிகளை வாண்டடாக சென்று வம்பிழுப்பது இவரின் வாடிக்கை. அப்படி இவரிடம் சமீபத்தில் சிக்கியவர் எதிர்வீட்டு வாசியான முருகன்.
கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வரும் முருகனுக்கும் அரைடவுசர் போலீசுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். சம்பவத்தன்று போலீஸ்கார் சோமபானம் அருந்தி சொர்க்கத்தின் விளிம்பில் இருந்துள்ளார், நிதானம் இழந்த நிலையில் இருந்த அவர் திடீரென அரை டவுசருடன் சாலைக்கு வந்து வீட்டின் எதிரே ஒரு ஓரமாய நின்றிருந்த முருகனின் பைக்கை எட்டி உதைத்து தள்ளினார்.
முருகன் வீட்டின் கிரில்கேட்டை பிடித்து ஆட்டுவது, அவர் வீட்டு வாசலில் இருந்த மரத்தின் கிளையை ஒடிப்பது என மதங்கொண்ட யானையை போல அந்த வீதியில் மருகி கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார். போலீசுடன் பொல்லாப்பு எதற்கு என்று நினைத்த முருகன், காவலரின் காலில் விழாத மன்னிப்பு கேட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகும் அரை டவுசரின் அட்டகாசம் அடங்கவில்லை.
வீதியில் நின்று ரகளை செய்தவர், திடீரென இடுப்பில் இருந்த ஒற்றை டவுசரையும் இறக்கி விட்டு பிறந்த மேனியாய் நின்றார். இதனை சற்றும் எதிர்பாராத பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின், முருகன் வீட்டிற்குள் நுழைந்த அவர், வீட்டில் இருந்த அவரின் மனைவியை நிர்வாண கோலத்தில் நின்றபடியே அர்ச்சிக்க தொடங்கினார். தகவல் அறிந்து முருகன், போலீசின் உதவியை நாட அங்கு வந்த அவர்கள் கிருஷ்ணகுமாருக்கு டவுசரை மாட்டி விட்டு அழைத்து சென்றனர்.
சாதாரண குடிமகன் ஒருவர் சாலையில் இப்படி ஆபாசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, கிருஷ்ணகுமாரை மட்டும் சமாதானம் பேசி ஏன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்பகுவாசிகள் கேள்வி எழுப்பிகின்றனர். மேலும் கண்ணிய குறைவாக நடந்த தலைமை காவலருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.