மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பருவ கால நீரோட்டத்தினால் அரிச்சல்முனை மூழ்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பருவ கால நீரோட்டத்தினால், அரிச்சல்முனையின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படும். அதன்படி, தற்போது அரிச்சல்முனை பகுதி மூழ்க துவங்கி உள்ளது. இதனால் சாலையோர தடுப்புச் சுவர் கடல் நீர் அரிப்பால் உடைந்து வருகிறது. இதனால் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் கம்பிபாடு பகுதியுடன் நிறுத்தப்படுகின்றனர். இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகளும், புனித நீராட வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.