வயல்வெளிகளில் உரம் தெளிக்க ஆளில்லா விமானம் வாங்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்பதால், விவசாய பணிகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பை சுமார் 12 நிமிடத்தில் உரம் தெளிக்கப்பட்டது.
ஆள்பற்றாக்குறை, அதிக கூலி பிரச்னைக்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் கைகொடுப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளில்லா விமானத்தை ஒவ்வொரு விவசாயியால் வாங்க முடியாது என்பதால், ஒவ்வொரு கிராமத்தில் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.