உடலுறுப்பு அறுவை சிகிச்சைக்கான கிட்னியை ட்ரோன் மூலம் கொண்டுச்சென்று சாதனை

உலகிலேயே முதன்முறையாக மனித கிட்னியை ட்ரோன் மூலம் மூன்று மைல் வரை எடுத்து சென்று உரிய நபருக்கு பொருத்திய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது…

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர்.ஜோசப் ஆர்.ஸ்கேலா தலைமையிலான குழுவினர், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உடலுறுப்புகளை சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைவாக கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்தனர். அதன் ஒரு பகுதியாக தானமாக பெறப்பட்ட கிட்னியை சிறிய ரக ட்ரோன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று டிரினா க்லிப்சி என்ற 44 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர். மேற்கு பால்டிமோரிலிருந்து மேரிலேண்ட் பல்கலைக்கழகத்திற்கு சிறிய ரக ட்ரோன் மூலம் 2 புள்ளி 8 மைல் தூரத்தை 9 நிமிடம் 52 விநாடிகளில் கொண்டு சென்று இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். எதிர்க்காலங்களில் உடலுறுப்புகளை நீண்ட தூரம் விரைவாக கொண்டுச் செல்ல இது துவக்கம் என்றும் டாக்டர்.ஜோசப் ஆர்.ஸ்கேலா தெரிவித்துள்ளார்.

Exit mobile version