ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தர்பூசணி விவசாயம் செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் வாழையில் ஊடுபயிராக தர்பூசணியை அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இதன் மூலம் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதாகவும், செலவும் குறைவாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக தர்பூசணி அதிகளவு பயிரிடப்படுவதால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.