கடுமையான வறட்சிக்கு மத்தியில் சொட்டு நீர் பாசனம் மூலம் சம்பங்கி மலர் பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம் என மணப்பாறையை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அழகக் கவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி சரவணன், தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மானிய உதவியுடன் சம்பங்கி பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். முழுவதும் சொட்டு நீர் பாசனத்தை மட்டுமே நம்பி, சம்பங்கி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார் சரவணன்.
ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில் சம்மங்கி பூ, செண்டு மல்லி, குண்டு மல்லி என பூக்கள் சாகுபடி செய்துள்ளார். தற்போதைய வறட்சி காலத்தில், அரசின் உதவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் விவசாயத்தை விட்டு வெளியேறி இருப்பேன் என உருக்கமாக கூறுகிறார் சரவணன்.