ஆனைமலை – நல்லாறு இணைப்பு திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்: பிரேமலதா

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சுல்தான் பேட்டையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஆனைமலை – நல்லாறு இணைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேட்பாளர் கந்தசாமி நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.

Exit mobile version