கைத்தறி நெசவாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி: தமிழக அரசுக்கு நன்றி

சேலம் மாவட்டம் கடையாம்பட்டியில் கைத்தறி நெசவாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம், செம்மாண்டப்பட்டி பகுதியில், 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக கிணறுகள் எதுவும் இல்லாததால் பக்கத்திலுள்ள விவசாய கிணறுகள் மூலமும், விலைக்கு வாங்கியும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவுபடி, நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தண்ணீர் குழாய்களை பொதுமக்களுக்கு அர்பணித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version