மேட்டூரில் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள்

மேட்டூரில் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தொடங்கி வைத்தார். இங்கு வசித்து வரும் 7 ஆயிரம் குடியிருப்புதாரர்கள் பயன்பெறும் வகையில்”ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்’ மூலம் ரூ 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ ., செம்மலை தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து 1கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

மேட்டூர் நகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய 28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 16 வாகனங்கள், 28 லட்சம் மதிப்பில் 5 இலகு ரக மினி குப்பை அள்ளும் வாகனங்களையும் எம்.எல்.ஏ.,செம்மலை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

Exit mobile version