நாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய தளவாய் சுந்தரம், குடிநீர் பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் தொடங்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Exit mobile version