விரைவில் ரயில் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வரும் 10-ஆம் தேதி, ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்து, சுமார் 65 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில் சுமார் ஒரு வாரகாலமாக மேட்டுச்சக்கரகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுகுடிநீர் தரைதொட்டியிலிருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் வரை, 3 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் வரை குழாய்கள் அமைக்கப்படும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ரயில்வே தண்டவாளம் அருகே ரயிலில் நீர் நிரப்ப ஏதுவாக குழாய் தாங்கிகளை அமைத்து வருகின்றனர். எனவே பணிகள் தீவிரமடைவதால் வருகின்ற 10-ஆம் தேதிக்குள் சென்னைக்கு ரயில் மூலம் நீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version