மேட்டூர் அணையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் நீர்மாதிரிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து சேலம் ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, தினமும் 64 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆத்தூர்,நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகள் மற்றும் 1345 வழியிடை கிராமங்கள் பயன்பெறுகின்றன. இந்தநிலையில் கடந்த 1 வார காலமாக நீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காவிரி நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது நீரில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட்டின் அளவு அதிகமாக இருந்ததால், நிறம் மாறியிருக்கலாம் என்றும், அதைத்தடுக்க மீண்டும் நன்கு சுத்திகரிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

Exit mobile version