சென்னை அடுத்த நெம்மேலியில் ஆயிரத்து 259 கோடி ரூபாய் மதிப்பில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையை அடுத்த நெம்மேலியில் ஏற்கனவே உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு சொந்தமான 10 புள்ளி 5 ஏக்கர் காலி நிலத்தில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது. ஆயிரத்து 259 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள இந்த ஆலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதிதாக அமைய உள்ள ஆலையில் தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட உள்ளது.முன்னதாக விழா ஏற்பாடுகள் குறித்து ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.