கனவு நகரத்தினை திறந்து வைத்தார் வடகொரிய அதிபர்

வடகொரியாவில் தனது கனவு திட்டங்களில் ஒன்றான “சம்ஜியோன்” நவீன நகரத்தை அதிபர் கிம் ஜான் அன் திறந்து வைத்தார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தனது கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரத்தை திறந்து வைத்தார். கிம் ஜாங் அன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு ‘சம்ஜியோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும். இது குறித்த செய்தி அந்நாட்டு அரசு நாளிதழில் வெளியிடப்படுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய நவீன நகரமாக சம்ஜியோன் உள்ளது.

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக, கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் எதிர்பார்த்ததை விட தாமதமாகவே இந்த நகரம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version