டிரைலரை வெளியிட்ட திரௌபதி படக்குழு

திரௌபதி படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.மோகன் என்பவரால் இயக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ளனர்.. இத்திரைப்படம் நாடகக்காதல்களை தோலுரிக்கும் திரைப்படமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததும் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டது..   இதை உறுதிபடுத்தும் விதமாக சாதிகள் உள்ளதடி பாப்பா எனவும், அடித்தால் திருப்பி அடி எனவும் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு..  இந்நிலையில் நேற்று மாலை திரௌபதி படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால்,பரபரப்பு ஏற்பட்டுள்ளது… டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 2 ம் இடம் பிடித்துவிட்டது.. தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகும் முதல் படம் இதுவாகும்.

Exit mobile version