நாடக நடிகர் வரதராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

கொரோனா சிகிச்சைப் பணிகள் குறித்து தவறான தகவலை வெளியிட்ட, நாடக நடிகர் வரதராஜன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதில்லை என்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும் நாடக நடிகர் வரதராஜன் தெரிவித்திருந்தார். தவறான தகவலை வெளியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வரதராஜன் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், நாடக நடிகர் வரதராஜன் மீது, 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வதந்திகளை பரப்புதல், உள்நோக்கத்தோடு செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Exit mobile version