பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது..

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 409 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1872 ஆக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கன அடி நீரும் என மொத்தம் 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே நாள் 78 அடியாக இருந்த நீர்மட்டம் , இந்த ஆண்டு 56 அடியாக இருப்பதால், பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Exit mobile version