அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், நாளை முதல் தேர்தல் சூறாவளி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வந்தவாசி பகுதியில் இருந்து நாளை மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாஸ், பிரசாரத்தை துவக்குகிறார். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு ஆரணி பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், இரவு 8 மணிக்கு போளூர் பகுதியிலும், 9 மணிக்கு திருவண்ணாமலை நகர பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
28ம் தேதி மாலை 5 மணிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்கும் அவர், மாலை 6.30 மணிக்கு திருச்சி மக்களவை தொகுதி, 8 மணிக்கு கரூர் மக்களவை தொகுதி, இரவு 9 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
29ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
இதேபோன்று, 30ம் தேதி மாலை 5 மணி முதல் கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ராமதாஸ், 31ம் தேதி கடலூர் மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
ஏப்ரல்1ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை விழுப்புரம் மக்களவை தொகுதியில் டாக்டர் ராமதாஸ் தேர்தல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். இதேபோல், 2ம் தேதியன்று, மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
3ம் தேதி மாலை 5 மணி முதல் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் பகுதியில் பிரசாரத்தை மேற்கொள்ளும் ராமதாஸ்,
4 மற்றும் 5ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 10மணி வரை ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
6ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை மத்திய சென்னை மற்றும் வடசென்னை தொகுதியிலும், 7ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 10மணி வரை மத்திய சென்னை மற்றும் தென்சென்னை பகுதியிலும் ராமதாஸ் பிரசாரம் மேற்கொள்கிறார்
8ம் தேதி மாலை 4 மணிமுதல் 10மணி வரை அரக்கோணம் மக்களவை தொகுதியிலும், 9ம் தேதி மாலை 4 மணிமுதல் 10 மணிவரை வேலூர் மக்களவை தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதிகளில் ராமதாஸ் பிரசாரம் செய்கிறார்.
10ம் தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஓசூர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் டாக்டர் ராமதாஸ், 11, 12, 13ம் தேதிவரை தர்மபுரி மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
14ம் தேதி மாலை 4 மணிமுதல் 10 மணிவரை சேலம் மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்யும் ராமதாஸ் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கிறார்