டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவு நாள்

இந்திய நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் விடுதலைக்காகவும் பாடுபட்ட அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்த தினம் இன்று.

பெண்டீராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும் என்ற பாரதியின் பாடலுக்கு ஏற்றவாறு, பெண் விடுதலைக்காக போராடியவர்தான் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார். இந்திய நாட்டு மக்களுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட அன்னிபெசன்ட் அம்மையார், 1847-ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி லண்டனில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் பிராங்க் பெசண்ட் என்ற பாதிரியாரை, 1886 ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு டிக்பி மற்றும் மேபேல் என்ற இரு பெண் குழந்தை இருந்தன, அதில் ஒருவர் கக்குவான் என்ற வியாதியால் மிகவும் அவதிப்பட்டார். அதைக் கண்ட இவர் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து நாத்தியவாதியாக மாறினார். கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படும் அவநம்பிக்கையை பற்றி ஒரு புத்தகத்தை எழுதி, தனது பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புத்தகத்தை எழுதியதியவர் இவர் தான் என்று தெரிந்தததால், தங்கியிருந்த பாதிரியார் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் சிறந்த எழுத்தாளரும், மேடை பேச்சாளரும் மட்டுமின்றி, விடுதலை போராட்ட வீராங்கணையாகவும் விளங்கியவர்.

சிறுவயது முதலே அரசியல் மற்றும் சமூகத்தில் ஈடுபாடு மிக்கவராய் திகழ்ந்தார் அன்னிபெசண்ட் அம்மையார். இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டதால், ஆங்கிலேயரின் அடக்குமுறை இவரை மிகவும் பாதித்தது. அதை எதிர்த்து, பெண் விடுதலைக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார். விடுதலை போராட்டத்திற்காக ‘காமன் வீல்’ என்ற வாரப்பத்திரிக்கையையும் ‘நியூ இந்தியா’ என்ற தினசரி பத்திரிக்கையையும் ஆரம்பித்தார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுய ஆட்சி வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தை தொடங்கி, ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர். 1907 ஆம் ஆண்டில் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட பிளவை தகர்த்தெறிந்து, லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி பெற்றவர். பல்வேறு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்த அன்னிபெசண்ட் அம்மையார், 1933ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். பெண் விடுதலைக்காக போராடிய அன்னிபெசண்ட் அம்மையாரின் பிறந்த நாளான இன்று, அவரின் போராட்டங்களையும், வீரத்தையும் நினைவுகூறுவோம்.

Exit mobile version