இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
2001ஆம் செப்டம்பர் 11ம் தேதி பயணிகளுடன் விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி தகர்த்தனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பலியாகினர். இதன், 18வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நேட்டோ படை வீரர்கள் தெரிவித்தனர். தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.