தேனி மாவட்டம் சின்னமனூரில், தைத் திருநாளை முன்னிட்டும், நமது பாரம்பரியத்தை மீட்டெடுத்து சட்ட வடிவமாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயம், இளஞ்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், தேன் சிட்டு, புஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நாடுமாடு, பெரியமாடு என 8 வகையான பிரிவுகளில், 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.