தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கதவனைகள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க உயரம் 120 அடியாகும். அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழே குறையும் போது 5 கண் மதகுகள் வழியாகவும், 50 அடிக்கு மேலே உள்ள போது 8 கண் மதகுகள் வழியாகவும், 100 அடிக்கு மேலே போகும் போது 16 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்நிலையில் பருவ மழை தொடங்கியதையடுத்து கதவனைகள் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்குள் பராமரிப்பு பணி நிறைவு பெறும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.